மேலும் செய்திகள்
கூடைப்பந்து போட்டி பெம் பள்ளி அபாரம்
07-Aug-2025
கோவை; கோவை அம்பாள் பொதுப்பள்ளியில், கோயம்புத்துார் சகோதயா பள்ளிகளுக்கு இடையே மாணவியருக்கான '5ஏ சைடு' கால்பந்து போட்டி நடந்தது. 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவிலான இப்போட்டியில், கேம்போர்டு இன்டர்நேஷனல் ஸ்கூல் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டது. எஸ்.எஸ்.வி.எம். இரண்டாம் இடத்தை பெற்றது. பத்தாம் வகுப்பு மாணவி அக்சரா (கேம்போர்டு) சிறந்த வீராங்கனைக்கான விருது பெற்றார். கோவை சகோதயா '5ஏ சைடு இன்டர் ஸ்கூல் புட்பால்' போட்டி, விளையாட்டுத்திறன் மற்றும் போட்டி மனப்பான்மையை வளர்த்து, நகரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பல பள்ளிகளை ஒன்றிணைத்தது. இதில், சாம்பியன்ஷிப் வென்றதாக தி கேம்போர்டு சர்வதேச பள்ளியும், 'ரன்னர் அப்' இடத்தை எஸ்.எஸ்.வி.எம்.பள்ளி மற்றும் சிறந்த வீராங்கனை அக்சரா (கேம்போர்டு சர்வதேசப் பள்ளி) என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, சாதனை படைத்ததற்கு, கேம்போர்டு பள்ளி மாணவ மாணவியருக்கு, அதன் தலைவர் அருள் ரமேஷ், தாளாளர் பூங்கோதை மற்றும் முதல்வர் டாக்டர் பூனம் சயால் ஆகியோர், வாழ்த்து தெரிவித்தனர்.
07-Aug-2025