உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / போலீஸ் ஸ்டேஷனுக்கு பெயர் பலகை இல்லை

போலீஸ் ஸ்டேஷனுக்கு பெயர் பலகை இல்லை

கிணத்துக்கடவு, ; கிணத்துக்கடவு போலீஸ் ஸ்டேஷனில் பெயர் பலகை கூட அமைக்கப்படாமல் இருக்கிறது. கிணத்துக்கடவு போலீஸ் ஸ்டேஷன் முன்பாக, சர்வீஸ் ரோட்டோரம் இருந்த பெயர் பலகை, சமீபத்தில், காற்றுடன் மழை பெய்த போது சேதமடைந்தது. அதன்பின், பெயர் பலகை அமைக்கப்படவில்லை. கிணத்துக்கடவு போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அதிகளவு வாகன விபத்துகள் நடக்கிறது. இதனால் பாதிக்கப்படும் நபர்கள் போலீஸ் ஸ்டேஷன் வருகின்றனர். வெளியூர்களில் இருந்து வருவோர், போலீஸ் ஸ்டேஷன் முன்பாக பெயர் பலகை இல்லாததால், ஸ்டேஷன் எங்கு உள்ளது என தேடும் நிலைக்கு உள்ளாகின்றனர். மேலும், ஸ்டேஷன் செல்லும் வழியில் மின் விளக்குகள் இல்லாததால் இரவு நேரத்தில் மக்கள் தடுமாறி செல்லும் சூழல் உள்ளது. இந்த வழித்தடத்தின் ஓரத்தில் புதராக உள்ளது. இதனால் மக்கள் அச்சத்துடன் செல்லும் நிலை உள்ளது. மேலும், இந்த வழித்தடத்தில் விபத்து ஏற்பட்ட வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளது. அந்த வாகனங்களில் இருந்து உதிரி பாகங்களை யாராவது எடுத்து சென்றாலும் தெரியாத அளவுக்கு அப்பகுதி இருளாக உள்ளது. எனவே, போலீஸ் ஸ்டேஷன் முன்பாக பெயர் பலகை அமைத்து, வழித்தடத்தில் உள்ள புதரை அகற்றி, மின்விளக்குகள் அமைக்க வேண்டும் என, மக்கள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை