உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  ஆனைமலை பகுதியில் இளநீர் விலை ரூ.23 நிர்ணயம்

 ஆனைமலை பகுதியில் இளநீர் விலை ரூ.23 நிர்ணயம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சி, ஆனைமலை தாலுகா பகுதியில், இளநீர் பண்ணை விலையை ஒப்பிடுகையில், 23 ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி, உடுமலை, ஆனைமலை பகுதியில், தென்னை விவசாயம் பிரதானமாக மேற்கொள்ளப்படுகிறது. இதில் இளநீர் முக்கிய இடத்தை வகிக்கிறது. வடமாநிலங்களில் இளநீருக்கு மவுசு ஏற்பட்டுள்ளது. இதனை ஏராளமானோர் பயன்படுத்துகின்றனர். இதனால், அங்கு இது அனுப்பப்படுகிறது. ஆனைமலை இளநீர் உற்பத்தியாளர் சங்கத்தின், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீனிவாசன் கூறியதாவது: இந்த வாரம், நல்ல தரமான குட்டை நெட்டை வீரிய ஒட்டு இளநீர் விலை, 23 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, ஒரு டன் இளநீரின் விலை, 10,000 ரூபாய். வட மாநிலங்களில் பெரும்பாலான இடங்களில் குளிரான தட்பவெப்ப நிலை நிலவுகிறது. தென்மாநிலங்களில், பரவலாக மழை பெய்து வருகிறது. இச்சூழலில், இளநீர் வரத்தும் அதிகமாக இருப்பதால், இளநீர் விலை குறைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, சீனிவாசன் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை