உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வீரகேரளத்தில் கீழே தள்ள காத்திருக்கிறது சாலை

வீரகேரளத்தில் கீழே தள்ள காத்திருக்கிறது சாலை

அடிக்கடி விபத்து வீரகேரளம், டாஸ்மாக் மதுக்கடை பகுதியில் சீரமைப்பு பணிகளுக்காக, சாலை தோண்டப்பட்டு ஐந்து மாதங்களுக்கு மேலாகியும் சரிசெய்யப்படாமல் உள்ளது. இச்சாலையில், வீரகேரளம் கரும்பு இனப்பெருக்க ஆராய்ச்சி நிலையம் அருகே, சாலை வளைவில் மண் மற்றும் ஜல்லிக்கற்களாக உள்ளது. பைக்கில் செல்வோர் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். - உண்ணிகிருஷ்ணன், வீரகேரளம்.எரியாத தெருவிளக்குகள் மாநகராட்சி, ஒன்பதாவது வார்டு, முருகன் நகர், அன்பு நகர், ஒன்றாவது வீதியில் தெருவிளக்குகள் எரிவதில்லை. மழைநீர் வடிகால் சுத்தம் செய்யப்படாததால், மழைக்காலங்களில் சாலையில் குளம் போல தண்ணீர் தேங்கி நிற்கிறது. பல முறை புகார் செய்தும் எந்த நடவடிக்கையுமில்லை. - சவுந்தரராஜன், அன்புநகர்.சாலையில் விளம்பரங்கள் ஒத்தக்கால்மண்டபம் மேம்பாலம் அருகே, பொதுமக்கள் நடந்து செல்லும் நடைபாதையை ஆக்கிரமித்து, கடைகளின் விளம்பரங்கள் வைக்கப்பட்டுள்ளன. நடந்து செல்பவர்களுக்கு இடையூறாக உள்ளதால், விளம்பரங்களை அகற்ற வேண்டும். - காந்தி, ஒத்தக்கால்மண்டபம்.சிக்னல் பழுது பாலக்காடு ரோடு, கோவைப்புதுார் பிரிவில் சிக்னல் பழுதாகியுள்ளது. சிக்னல் வேலை செய்யாததால், வாகனங்கள் தாறுமாறாக செல்கின்றன. இதனால், அடிக்கடி இப்பகுதியில் விபத்து ஏற்படுகிறது. - ராமன், கோவைப்புதுார் பிரிவு.மலைபோல் குவியும் குப்பை செல்வபுரம், 78வது வார்டு, குளத்தை ஒட்டிய பகுதியில், சிலர் தொடர்ந்து திறந்தவெளியில் குப்பையை வீசிச்செல்கின்றனர். ஆங்காங்கே மலை போல் குப்பை குவிந்துள்ளது. குப்பையை அகற்றக்கோரி பலமுறை வலியுறுத்தியும் நடவடிக்கையில்லை. - பாலமுருகன், செல்வபுரம்.குப்பைமேடான பேருந்து நிலையம் மருதமலை அடிவாரம் பேருந்து நிறுத்தம் முழுவதும், குப்பை நிறைந்து காணப்படுகிறது. பல நாட்களாக தேங்கியுள்ள கழிவு, அழுகி துர்நாற்றம் வீசுகிறது. பேருந்து நிலையத்தில் குப்பை கொட்டுவதை தடுக்க வேண்டும். - ஹரிதாஸ், மருதமலை. இரவில் தொடரும் விபத்து தொண்டாமுத்துார், சுண்டப்பாளையம் பகுதியில் தனியார் குடியிருப்பு பகுதி அருகே வேகத்தடை மற்றும் பேரிகார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. வேகத்தடை இருப்பது குறித்து எந்த அறிவிப்பு பலகையும் வைக்கப்படாததால், இரவு நேரங்களில் விபத்து ஏற்படுகிறது. - தங்கவேல், தொண்டாமுத்துார்.தெருவிளக்கு பழுது கவுண்டம்பாளையம், 33வது வார்டு, செந்தமிழ் நகரில், ஒரு மாத காலமாக தெருவிளக்கு எரியவில்லை. இரவு நேரங்களில் முதியவர்கள், பெண்கள் வெளியே செல்லவே அஞ்சுகின்றனர். மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் செய்தும் நடவடிக்கையில்லை. - முருகேசன், கவுண்டம்பாளையம்.கடும் துர்நாற்றம் மாநகராட்சி, 81வது வார்டு, தாமஸ் வீதியில், ரங்கே கவுடர் வீதியில், வீராசாமி முதலியார் பள்ளிக்கு செல்லும் வழியில், சாலை நடுவே பாதாள சாக்கடை உடைந்து தண்ணீர் சாலையில் வழிந்தோடுகிறது. இப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசுகிறது. - ஹரிதாஸ், 81வது வார்டு.மழையில் குளமாகும் சாலை வேலாம்பாளையம் முதல் காலேஜ் ரோடு, ரிங் ரோடு பகுதியில் ஒவ்வொரு முறையும் மழையின் போது சாலையில், குளம் போல தண்ணீர் தேங்கி நிற்கிறது. பைக்கில் செல்வோர் தட்டுத்தடுமாறி செல்கின்றனர். அரை அடிக்கு மேல் தண்ணீர் தேங்கி நிற்பதால், நடந்து செல்லவே முடியவில்லை. - வேலுமணி,வேலாம்பாளையம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை