மேலும் செய்திகள்
தி.மு.க., உறுப்பினர் சேர்க்கை முகாம்
16-Oct-2024
கோவை: சரவணம்பட்டி அருகே சின்னவேடம்பட்டி கவுமார மடாலயத்தில், பா.ஜ., மகளிர் அணி சார்பில் மகளிர் தீபாவளி திருவிழா, உறுப்பினர் சேர்க்கை பயிலரங்கம் நடந்தது. நிகழ்ச்சிக்கு, பா.ஜ., மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் தலைமை வகித்தார். தேசிய பா.ஜ., மகளிர் அணி தலைவி வானதி பேசுகையில், பெண்களிடம் பெண்கள் தான் எளிதாக அணுகி பேசி உறுப்பினராக்க முடியும். ஒவ்வொரு மகளிரும் குறைந்த பட்சம், 50 உறுப்பினர்களையாவது சேர்க்க வேண்டும். இந்திய அளவில் பா.ஜ.,வில்தான், 60 சதவீத இளைஞர்கள் இணைந்துள்ளனர். மகளிரும் அதற்கு இணையாக அதில், 50 சதவீதமாக இருக்க வேண்டும். தற்போது மகளிர் அளவு 20 சதவீதமாக மட்டுமே உள்ளது. மகளிருக்கு அதிக அளவில், பா.ஜ., உரிமைகளை அளித்துள்ளது. இதை எடுத்துச் சொல்லி, உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். அவ்வாறு சேர்க்கும் தீவிர உறுப்பினர்களுக்கு நிச்சயம் பதவி உண்டு. யாருடைய சிபாரிசும் இல்லாமல் இது நடக்கும். இவ்வாறு, வானதி பேசினார். விழாவில், மத்திய அரசின் நலத்திட்டங்களை மக்களுக்கு சேர்க்க, நடமாடும் டிஜிட்டல் வாகனம் அறிமுக விழா நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு, மகளிர் அணி மாவட்ட தலைவர் ஜெயஸ்ரீ குன்னத் தலைமை வகித்தார். மாவட்ட முன்னாள் தலைவர் உத்தமராமசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதிக உறுப்பினர்களை சேர்த்த மகளிர் கவுரவிக்கப்பட்டனர்.
16-Oct-2024