உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / நாளை தென்னிந்திய வணிக உச்சி மாநாடு நடக்கிறது

நாளை தென்னிந்திய வணிக உச்சி மாநாடு நடக்கிறது

கோவை: ரிச்னஸ் கிரியேட்டர்ஸ் சார்பில், 20வது மாபெரும் தென்னிந்திய வணிக உச்சி மாநாடு, நவ இந்தியா, இந்துஸ்தான் கல்லுாரி மைதானத்தில் நாளை நடக்கிறது.நிறுவனத்தின் நிறுவனர் ஷோகத் கூறியதாவது: இந்த உச்சி மாநாட்டில், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் மற்றும் எஸ்.எம்.இ., துறையைச் சேர்ந்த தொழில் முனைவோர், வணிகர்கள் பங்கேற்க உள்ளனர். தலைமை, சேவை, அமைப்பு கலாசாரம் மற்றும் விற்பனை ஆகிய, நான்கு முக்கிய வணிகத்துறைகளில், வணிகத்தை வலுப்படுத்துவதே, மாநாட்டின் நோக்கம்,'' என்றார்.'தலைமை' என்ற தலைப்பில் நீயா நானா கோபிநாத், 'விற்பனை' என்ற தலைப்பில் சேரன் அகாடமியின் வணிக பயிற்சியாளர் ஹுசைன், 'சேவை' பற்றி ஷோகாத், 'அமைப்பு கலாசாரம்' பற்றி கேரளாவை சேர்ந்த மனநிலை பயிற்சியாளர் மானி பால் உரையாற்ற உள்ளனர். சரியான அடையாள அட்டையுடன் வரும் எம்.பி.ஏ., மாணவர்களுக்கு, டிக்கெட் கட்டணத்தில் சிறப்பு தள்ளுபடி உண்டு. மேலும் தகவல்களுக்கு, 93454 45030, 93453 86339 ஆகிய எண்களில் அழைக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ