உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சிறுவாணியின் நீர் மட்டம் 43.66 அடியாக உயர்ந்தது

சிறுவாணியின் நீர் மட்டம் 43.66 அடியாக உயர்ந்தது

கோவை: மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில் தொடர்ந்து பெய்து வரும் மழையால், சிறுவாணி அணையின் நீர் மட்டம், 43.66 அடியாக உயர்ந்திருக்கிறது.கோவைக்கு மிக முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி அணை அமைந்துள்ள மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் தொடர்ந்து மழைப்பொழிவு காணப்படுகிறது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி அணை பகுதியில், 55 மி.மீ., அடிவாரத்தில், 26 மி.மீ., மழைப்பொழிவு காணப்பட்டது. குடிநீர் தேவைக்காக, 9.43 கோடி லிட்டர் எடுக்கப்பட்டு, கோவை மக்களுக்கு சப்ளை செய்யப்பட்டது. நேற்றைய தினம் அணையின் நீர் மட்டம், 43.66 அடியாக உயர்ந்திருந்தது.மாவட்டத்தின் இதர பகுதிகளில் பெய்த மழையளவு: பீளமேடு விமான நிலையம் - 11.30, பெரியநாயக்கன்பாளையம் - 20.60, அன்னுார் - 8.20, சூலுார் - 8, வாரப்பட்டி - 14, ஆனைமலை - 11, ஆழியார் - 12.60, சின்கோனா - 28, சின்னக்கல்லார் - 22, வால்பாறை - 23, சோலையார் - 35 மி.மீ., மழை பதிவானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ