தீரன் சின்னமலை நினைவுதினம்
பொள்ளாச்சி; பொள்ளாச்சி, எம்.எல்.ஏ., அலுவலகத்தில், சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் 220-வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. அவரின் திருவுருவ படத்திற்கு, எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன், மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, தீரன் சின்னமலையின் வரலாறு குறித்து விவரிக்கப்பட்டது. அ.தி.மு.க., நகர செயலாளர் கிருஷ்ணகுமார், ஒன்றிய செயலாளர்கள் சக்திவேல், செந்தில்குமார், மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளர் ரகுபதி, மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.