மேலும் செய்திகள்
கோவில் உண்டியல் உடைத்து திருட்டு
24-Sep-2024
கோவை: கோவையில், பட்டப் பகலில் வீட்டின் பூட்டை உடைத்து, 60 பவுன் நகையை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.கோவை, ஆர்.எஸ்.புரம், கிழக்கு சம்பந்தம் ரோட்டை சேர்ந்தவர் குமார்,43; இவரது மனைவி சங்கீதா,41. இவர்கள் இருவரும், பூ மார்க்கெட் பகுதியில், ஹோட்டல் மற்றும் பெட்டிக்கடை நடத்தி வருகின்றனர்.செல்வராஜ், 70 என்பவரின் வீட்டின் முதல் மாடியில், வாடகைக்கு குடியிருந்து வருகின்றனர். தரைத்தளத்தில், வீட்டின் உரிமையாளர் செல்வராஜ் வசித்து வருகிறார். நேற்று காலை, குமாரும், சங்கீதாவும் வழக்கம்போல, ஹோட்டலுக்கு சென்று விட்டனர். பகல், 2:30 மணியளவில், மாடியில் சத்தம் கேட்டு, செல்வராஜ் வெளியே வந்து பார்த்தபோது, குமாரின் வீட்டில் இருந்து ஹெல்மெட் அணிந்த இருவர் வந்துள்ளனர்.செல்வராஜ், அவர்களை பிடித்து விசாரித்தபோது, மர்ம நபர்கள் செல்வராஜை தள்ளிவிட்டு, வீட்டின் வெளியே இருந்த காரில் ஏறி தப்பினர்.தகவல் அறிந்து வந்த குமார் பார்த்தபோது வீட்டுக்கதவு, பீரோ உடைக்கப்பட்டு, 60 பவுன் நகைகள் கொள்ளை போயிருந்தன. குமார் அளித்த புகாரின் பேரில், ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
24-Sep-2024