மேலும் செய்திகள்
மரக்கன்று நடும் விழா
23-Mar-2025
அன்னுார், ; காரமடை எஸ்.ஆர்.எஸ்.ஐ., பள்ளி, 98ம் ஆண்டு மாணவர்கள், 2016ல் 'நேர்ச்சி' அறக்கட்டளையை துவக்கினர். இதன் வாயிலாக, சுற்றுச்சூழல் மேம்பாடு, கல்வி, சுகாதாரத்திற்கு சமூக பணிகள் செய்து வருகின்றனர்.ஒன்பதாவது ஆண்டாக நேற்று முன்தினம் கருவலுாரில் உள்ள ஸ்ரீ சங்கர சேவாலய அறக்கட்டளை வளாகத்தில், 50 பழ மரக்கன்றுகள் நட்டனர். கொய்யா, மா, சீத்தா, சப்போட்டா, எலுமிச்சை, அத்தி மற்றும் தென்னை நாற்றுக்கள் நடப்பட்டன. அறக்கட்டளை நிர்வாகிகள் பேசுகையில், 'இன்று நாம் நடும் ஒரு மரக்கன்று, நாளை ஒரு காடாக உருவாகும். பசுமையான எதிர்காலத்தை நம் சந்ததிக்கு நாம் வழங்க வேண்டும். நடிகர் விவேக்கின் நினைவு தினத்தை அனுசரிக்கும் வகையில் கூடுதலாக மரக்கன்றுகள் நடப்பட்டன,' என்றனர்.
23-Mar-2025