உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கனிமவள கொள்ளை விவகாரத்தில் தப்ப முடியாது! அதிகாரிகளுக்கு சஸ்பெண்ட் உத்தரவு; ஆதரவு திரட்டுகிறது மாவட்ட நிர்வாகம்

கனிமவள கொள்ளை விவகாரத்தில் தப்ப முடியாது! அதிகாரிகளுக்கு சஸ்பெண்ட் உத்தரவு; ஆதரவு திரட்டுகிறது மாவட்ட நிர்வாகம்

கோவை; கோவையில் நடந்த கனிமவள கொள்ளையில், தொடர்புடைய அதிகாரிகள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை மேற்கொள்ள, ஆதாரம் சேகரிக்கும் பணியில், மாவட்ட நிர்வாகம் இறங்கியுள்ளது.கோவை மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள, அரசு புறம்போக்கு நிலங்கள், பட்டா நிலங்கள் மற்றும் நீரோடைகளில் இருந்து, கனிம வளங்கள் கடத்தி விற்பனை செய்யப்பட்டது. இதை தமிழக அரசும், அதிகாரிகளும் தடுக்க தவறினர்.இதையடுத்து ஐகோர்ட், கனிம வள கடத்தல் தொடர்பாக விசாரணை நடத்த, சிறப்பு புலனாய்வு குழுவை நியமித்தது. எப்.ஐ.ஆர்., பதிவு செய்து, கைது நடவடிக்கை எடுக்க முழு அதிகாரம் வழங்கியது. சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை மேற்கொண்டு, கோர்ட்டில் அறிக்கை சமர்ப்பித்தது.இச்சூழலில், உஷாரான தமிழக அரசும் மாவட்ட நிர்வாகமும், 'கனிம வளம் கடத்தப்பட்ட இடங்களில் பணியாற்றிய, கிராம நிர்வாக அலுவலர்களை இடமாறுதல் செய்தது. பேரூர் மற்றும் கோவை வடக்கு தாலுகாக்களை சேர்ந்த, 19 கிராம நிர்வாக அதிகாரிகளை, அருகருகே உள்ள கிராமங்களுக்கு மாறுதல் செய்தது.தெற்கு கோட்டாட்சியர் எல்லைக்குட்பட்ட பேரூர் தாலுகாவை சேர்ந்த, 14 வி.ஏ.ஓ.,க்கள் மதுக்கரை தாலுகாவுக்கும், வடக்கு கோட்டாட்சியர் எல்லைக்குட்பட்ட, வடக்கு தாலுகாவை சேர்ந்த ஐந்து வி.ஏ.ஓ.,க்கள், மேட்டுப்பாளையம் தாலுகாவுக்கும் மாற்றப்பட்டனர்.இதில் சிலர், மாறுதலை ரத்து செய்து ஏற்கனவே பணிபுரிந்த பணியிடத்துக்கு மாற்றக் கோரி ஆர்.டி.ஓ.,விடம் வேண்டுகோள் விடுத்தனர். அதற்கு ஆர்.டி.ஓ.,க்கள் மறுப்பு தெரிவித்தனர்.

ஆதாரம் திரட்டல்

இதையடுத்து, ஐகோர்ட் உத்தரவுக்கு கட்டுப்பட்டு, பேரூர் மற்றும் கோவை வடக்கு தாலுகாவில் பணிபுரிந்த வி.ஏ.ஓ., ஆர்.ஐ., மற்றும் தாசில்தார்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள, மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. அதற்கான ஆதாரங்களை திரட்டி வருகிறது.வலுவான ஆதாரங்கள் கிடைத்த பின், அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் 'சஸ்பெண்ட்' செய்யப்படுவர். சிறப்பு புலனாய்வு குழு விசாரணை முடிந்த பிறகே, அவர்களுக்கு பணி வழங்கப்படும் என, உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.இது குறித்து, மேலும் அவர் கூறுகையில், 'கோர்ட் உத்தரவை மதிக்க வேண்டும். அதற்காக சரியான வழியில் தற்போது மாவட்ட நிர்வாகம் சென்று கொண்டிருக்கிறது. அதனால் விரைவில், கனிமவள கொள்ளைக்கு ஆதரவாக செயல்பட்ட, அதிகாரிகளையும் பணியாளர்களையும், 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவு வெளியாகும்' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Saleemabdulsathar
மார் 09, 2025 05:12

முறைகேட்டில ஈடுபட்ட அதிகரிள் மீது அரசு தற்காலிக பனியிடை நீக்கம் என்ற கண்துடைப்பு நாடகத்தை நடத்த கூடாது விரைவாக விசரனை நடத்தி அவர்களை சிறையில் அடைக்கவேன்டும்


K.n. Dhasarathan
மார் 08, 2025 17:59

முதல்வர் அவர்கள் இரும்பு கரம் கொண்டு நடவடிக்கை எடுக்கணும், தயவு தாட்சண்யம் பார்க்க கூடாது இங்கே தட்டினா அங்கு வழிக்கணும், எங்கெங்கு தவறு நடக்கிறதோ அங்கெல்லாம் வழிக்கணும், செய்வாரா முதல்வர். ? மக்கள் ஆதரவு கண்டிப்பாக கிடைக்கும்.


Dr G Ranganathan
மார் 08, 2025 10:56

ஆனால் இந்த கனிமவள விவகாரம் 2005 ஆவது வருடத்தில் இருந்து வருடாவருடம் அதிகமாகிக் கொண்டு வந்து, தற்பொழுதுள்ள நிலைமையை அடைந்திருப்பதால் இதுவரை பணி புரிந்த அனைத்து அதிகாரிகளுக்கும் இந்த கடமை உள்ளது என்பதை மாவட்ட நிர்வாகம் மனதில் கொண்டு செயல்பட வேண்டும். உண்மையில் சொல்லப்போனால், தற்போது பதவியில் உள்ள அதிகாரிகள் இதில் குறைந்த பங்கே ஆற்றி இருக்க முடியும்.... ஏனென்றால் நடவடிக்கைகள் பல வருடங்களாக நடைபெற்று, அவை கட்டுக்கடங்காத நிலைக்கு சென்று விட்டன ... அதனால் இப்போது உள்ள அதிகாரிகளின் கைகள் கட்டப்பட்டு இருந்தன என்பது உண்மை.


தமிழன்
மார் 08, 2025 01:10

ஓ நாட்டை கொள்ளை அடித்தால் வெறும் சஸ்பெண்ட் செய்வதுதான் மிகப் பெரிய தண்டனையா? சூப்பர் இதுதான் மிக மிக கொடிய தண்டனை போல என்ன எழவுடா இது?? கண்ணாடிய திருப்புனா ஆட்டோ ஓடுற மாதிரி


முக்கிய வீடியோ