உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / முதலுதவி பெட்டியில் மருந்தில்லை

முதலுதவி பெட்டியில் மருந்தில்லை

பொள்ளாச்சி : அரசு போக்குவரத்து கழகம், பொள்ளாச்சி பணிமனைகளில் இருந்து, அதிகப்படியான புறநகர் மற்றும் டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன. தினமும், அதிகப்படியான பயணியர், பல்வேறு பகுதிகளுக்கும் சென்று திரும்புகின்றனர்.பஸ்களில் பயணிக்கும் பயணியருக்கு ஏதேனும் காயம், நோய் பாதிப்பு இருந்து உடல்நலக்குறைவு ஏற்பட்டால், சிகிச்சை அளிக்க, மருந்துப் பொருட்களை உள்ளடக்கிய முதலுதவி பெட்டி பஸ்களில் கிடையாது. சில பஸ்களில், முதலுதவி பெட்டி இருந்தும் மருந்துகள் இல்லாமல் இருப்பதால், பயணியர் அதிருப்தியடைந்துள்ளனர். போக்குவரத்து விதிப்படி, 32 மருத்துவப் பொருட்களை உள்ளடக்கிய முதலுதவிப் பெட்டி அமைக்க வேண்டும், என்றனர் பயணியர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ