உள்ளூர் செய்திகள்

பாதுகாப்பு இல்லையே!

கிணத்துக்கடவு அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளியின் வெளிப்புற சுவற்றின் ஓரத்தில் நடைபாதை உள்ளது. இந்த நடைபாதையில் தான், பள்ளியின் 'கேட்' முன்பாக அதிகளவு குப்பை குவிக்கப்பட்டுள்ளது.மேலும், இதே இடத்தில் தண்ணீர் கசிவு ஏற்பட்டுள்ளதால், இந்த இடமே சகதியாக மாறி, கேட் திறக்க முடியாத நிலை உள்ளது. அப்பகுதியில் புதர் செடிகளும் வளர்ந்துள்ளது.இதே போன்று, கொண்டம்பட்டி அரசு பள்ளியின் சுற்றுச்சுவர் ஒரு பகுதியில், சேதமடைந்து உள்ளது. சுவரின் நடுவே பெரிய அளவிலான ஓட்டை ஏற்பட்டு, சுவர் இடிய வாய்ப்புள்ளது. இதை பள்ளி நிர்வாகம் கவனித்து சரி செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ