உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / உங்கள் குழந்தைக்கு உள்ளேயும் ஒளிந்து இருக்கலாம் ஒரு நியூட்டன்!

உங்கள் குழந்தைக்கு உள்ளேயும் ஒளிந்து இருக்கலாம் ஒரு நியூட்டன்!

மரத்தில் இருந்து ஆப்பிள் கீழே விழுவது ஏன்?

- கண்டறிந்தார் நியூட்டன். கிடைத்தது புவி ஈர்ப்பு விசை. இவர் இதை வெளியிடுவதற்கு முன்பும் கூட, ஆப்பிள், மரத்தில் இருந்து கீழே விழுந்து கொண்டு தான் இருந்தது.வினா எழுப்பினார்; விடை கிடைத்தது... அவ்வளவே! 'என்னை கண்டுபிடி' என்று ஒளிந்து விளையாடுகிற அறிவியலில், ஏராளமான படைப்புகள் வெளிவர காத்திருக்கின்றன.சிந்தனை மட்டுமே, மூளைக்கு நாம் செலுத்தும் ஆக்சிஜன். அதற்கு ஒரு வழிகாட்டுகிறது, கோவை மண்டல அறிவியல் மையம். இதில் என்னென்ன சிறப்புகள் இருக்கிறது; எப்படியெல்லாம் மாணவர்களுக்கு வழிகாட்டும் என்பது குறித்து மைய அலுவலர் சுடலை கூறியதாவது.அறிவியலை சிறப்பாக கற்கச் செய்கிறது கேளிக்கை அறிவியல் காட்சியரங்கு.அறிவியல் எவ்வாறு வேலை செய்கிறது என்பதை, பார்வையாளர்கள் காட்சியரங்கில் தொடு முறை அனுபவத்தின் வாயிலாக அறிந்து கொள்ளலாம்.இது, ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் படைப்புத் திறனை வெளிக்கொண்டு வரச்செய்யும். புவி ஈர்ப்பு விசை, ஒளி, நெம்புகோல், தொடர் பார்வையுணர்வு போன்ற, 45 வகையான காட்சிப் பொருட்களை, அறிவியல் பூங்காவில் பார்க்கலாம். இங்கிருக்கும் அறிவியல் கருவிகள், குழந்தைகளின் அறிவுத் திறனை நிச்சயமாய் மேம்படுத்தும்.கோளரங்க பலுானுக்குள், கோளரங்க ஊடாடு காட்சி விண்பொருட்கள், நட்சத்திரக் கூட்டங்களின் நகர்வு போன்ற அடிப்படை தத்துவங்களை, எளிதில் புரிந்துக் கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.மாணவர்கள் மற்றும் பொதுமக்கள், தேசிய விடுமுறை நாட்கள் தவிர, மற்ற எல்லா நாட்களிலும் காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை, மண்டல அறிவியல் மையத்தை பார்வையிடலாம்.கோடை விடுமுறையில் வீட்டில் டிவி, மொபைல் போன் பார்த்து பொழுதை கழிக்கும் நம் குழந்தைகளை, மண்டல அறிவியல் மையத்துக்கு அழைத்துச்செல்லுங்கள்.யாருக்கு தெரியும்...அவர்களுக்கு உள்ளேயும் ஒரு நியூட்டன் ஒளிந்திருக்கலாம்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !