மேலும் செய்திகள்
22 இலங்கை தமிழர் ஜோடிகளுக்கு திருமணம்
27-Jul-2025
மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் அடுத்த வேடர் காலனி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்தில், தேர்த்திருவிழா நடந்தது. கடந்த 8ம் தேதி முள்ளி பங்கு பாதிரியார் ஞானப்பிரகாசம் தலைமையில் திருப்பலி மறையுரை முடிந்த பின், திருவிழா கொடியேற்றம் நடந்தது. பாதிரியார்கள் கிளாட்வின், ஆண்டனி பெலிக்ஸ் ஆகியோர் சிறப்பு நவநாள் திருப்பலியை நிறைவேற்றினர். தேர்த்திருவிழா திருப்பலியை, பவானிசாகர் ஆலய பாதிரியார் பிச்சைமுத்து நிறைவேற்றி மறையுரை ஆற்றினார். பின்பு அலங்காரம் செய்த ஆரோக்கிய அன்னையின் தேரை, ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். இவ்விழாவில் ஏராளமான கிறிஸ்தவ மக்கள் பங்கேற்றனர். விழா ஏற்பாடுகளை மேட்டுப்பாளையம் பங்கு பாதிரியார் பிலிப் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு மக்கள் செய்திருந்தனர்.
27-Jul-2025