உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  எஸ்.ஐ.எச்.எஸ். காலனி மேம்பாலத்தை ஒருவழியாக திறக்கப்போகிறார்கள்

 எஸ்.ஐ.எச்.எஸ். காலனி மேம்பாலத்தை ஒருவழியாக திறக்கப்போகிறார்கள்

கோவை: தமிழக நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவு சார்பில், கோவையில் மேற்குப்புறவழிச்சாலை முதல்கட்டப் பணி, இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அடுத்தாண்டு ஜனவரி மாதம் பயன்பாட்டுக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. இதேபோல், தண்ணீர் பந்தல் - விளாங்குறிச்சி ரோடு ரயில்வே மேம்பாலப் பணி நடந்து வருகிறது. நீலிக்கோணாம்பாளையம் ரயில்வே மேம்பாலத்துக்கு தேவையான, நிலம் கையகப்படுத்தும் பணி மேற்கொள்ளப்படுகிறது. சிங்காநல்லுார் எஸ்.ஐ. எச்.எஸ்., மேம்பாலம் பணி முடிக்கப்பட்டு, திறப்பு விழாவுக்கு தயாராக உள்ளது. மேம்பாலத்தின் கீழ்ப்பகுதியில் வர்ணம் பூசப்படுகிறது. அணுகு சாலையில் 3 மீட்டர் அகலத்துக்கு ரோடு மற்றும் மழை நீர் வடிகால் கட்டப்பட்டுள்ளது. அப்பகுதியை சேர்ந்தவர்கள், மீதமுள்ள பகுதியிலும் தார் ரோடு போட்டுக் கொடுக்க கோரிக்கை விடுத்தனர். அதையேற்று, மாநகராட்சி பொது நிதியில் மேலும் 3 மீட்டர் அகலத்துக்கு ரோடு போட, முடிவு செய்யப்பட்டுள்ளது. மேம்பாலப் பணியை கலெக்டர் பவன்குமார், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் பார்வையிட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ