உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / இஷ்டம் போல் வைக்கின்றனர் கிரில் மேடையும், டிவைடரும்! அகற்ற வேண்டும் போக்குவரத்து போலீசார்

இஷ்டம் போல் வைக்கின்றனர் கிரில் மேடையும், டிவைடரும்! அகற்ற வேண்டும் போக்குவரத்து போலீசார்

கோவை; கோவையில் வர்த்தக நிறுவனங்கள் அதிகமுள்ள ரோடுகளில், கடைகளுக்கு முன் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க, இரும்பு கிரில் மேடை மற்றும் 'நோ பார்க்கிங்' டிவைடர் வைக்கப்படுகிறது. அவற்றை அகற்ற, மாநகர போக்குவரத்து போலீசார் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.கோவை மாநகராட்சி பகுதியில் கிராஸ்கட் ரோடு, நுாறடி ரோடு, ஆர்.எஸ்.புரம், டவுன்ஹால், ஒப்பணக்கார வீதி, வைசியாள் வீதி, நஞ்சப்பா ரோடு உள்ளிட்ட நகர் பகுதியில் உள்ள பிரதான ரோடுகளின் இரு புறமும், வர்த்தக நிறுவனங்கள் ஏராளமாக உள்ளன. கடைக்கு பொருட்கள் வாங்க வருவோர், ரோட்டில் வாகனங்களை நிறுத்தி விட்டு வருவது வழக்கம்.இவ்வாறு வருவோர், தங்களது கடைகளுக்கு முன் வாகனங்களை நிறுத்துவதை தடுக்கும் வகையில், இரும்பு கிரில் மேடை அமைத்திருக்கின்றனர். சில இடங்களில், 'நோ பார்க்கிங்' டிவைடர் வைக்கப்பட்டிருக்கின்றன.இதேபோல், சில வீடுகளுக்கு முன்பும் 'நோ பார்க்கிங்' டிவைடர் வைக்கப்பட்டு, வாகனங்கள் நிறுத்துவது தடுக்கப்படுகிறது. இது, போக்குவரத்து விதிமுறைப்படி தவறு.இதுதொடர்பாக, கலெக்டர் தலைமையில் நடந்த சாலை பாதுகாப்பு கமிட்டியில் விவாதிக்கப்பட்டிருக்கிறது.இதுபோன்று சென்னையில் நடந்த நிகழ்வு ஒன்றில், ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு, போக்குவரத்து போலீசாருக்கு, அறிவுறுத்தல் வழங்கப்பட்டு இருக்கிறது.இதுதொடர்பாக, சாலை பாதுகாப்பு கமிட்டி உறுப்பினர் கதிர்மதியோன் கூறுகையில், ''ஒரு வீட்டுக்கு முன் வாகனம் நிறுத்தி, வழித்தடத்தை மறிக்கக் கூடாது; அவ்வீட்டில் வசிப்போர் அவசரத்துக்கு வெளியே செல்ல முடியாத நிலை ஏற்படும்.வீடு மற்றும் கடைகளுக்கு முன் ரோட்டில், 'நோ பார்க்கிங்' என போர்டு வைத்து மறிப்பது தவறு. 'நோ பார்க்கிங்' போர்டுகளை போலீசார் மட்டுமே வைக்க வேண்டும்; மற்றவர்கள் யார் வைத்தாலும் சட்ட விரோதம்.சிலர் தங்களது கடைக்கு விளம்பரம் செய்யும் வகையில் போர்டு வைத்து, வாகனம் நிறுத்த தடை விதிக்கின்றனர். பிளாட்பாரத்தில் பொதுமக்கள் நடந்து செல்ல, எந்த தடையும் இருக்கக் கூடாது.போக்குவரத்து சிரமங்களை கருத்தில் கொண்டு, கடைகள் மற்றும் வீடுகளுக்கு முன் வைக்கப்பட்டு இருக்கும், இரும்பு கிரில் மற்றும் டிவைடர்களை, போலீசார் அகற்ற வேண்டும்,'' என்றார்.வீடு மற்றும் கடைகளுக்கு முன் ரோட்டில், 'நோ பார்க்கிங்' என போர்டு வைத்து மறிப்பது தவறு. 'நோ பார்க்கிங்' போர்டுகளை போலீசார் மட்டுமே வைக்க வேண்டும்; மற்றவர்கள் யார் வைத்தாலும் சட்ட விரோதம்.சிலர் தங்களது கடைக்கு விளம்பரம் செய்யும் வகையில் போர்டு வைத்து, வாகனம் நிறுத்த தடை விதிக்கின்றனர். பிளாட்பாரத்தில் பொதுமக்கள் நடந்து செல்ல, எந்த தடையும் இருக்கக் கூடாது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

அப்பாவி
ஜன 04, 2025 08:27

அறிவைத் தொட்ட கையால் நம்ம ட்ராஃபிக்.போலுசையும், மக்களையும் தொடவில்லை. கோயமுத்தூர் மட்டுமில்லை. எல்லா ஊர்களிலும் இதே எழவுதான். தடுப்புகளின் மேல் ஸ்பான்சர்தார்களின் விLaம்பரம் வேறெ.


சமீபத்திய செய்தி