உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மருதமலை சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம்

மருதமலை சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம்

வடவள்ளி; மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கந்த சஷ்டி விழாவையொட்டி, திருக்கல்யாண உற்சவம் வெகு விமர்சையாக நடந்தது.முருகனின் ஏழாம் படை வீடாக மருதமலை சுப்பிரமணியசுவாமி கோவில் கருதப்படுகிறது. இக்கோவிலில் கடந்த நவ., 2ம் தேதி, காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி விழா துவங்கியது. நாள்தோறும் காலையும், மாலையும், யாகசாலை பூஜை, அபிஷேக ஆராதனை, திருவீதியுலா நடந்தது. கந்த சஷ்டி விழாவின் ஆறாம் நாளில், சூரசம்ஹார நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது. கந்த சஷ்டி விழாவின் இறுதி நாளான நேற்று, திருக்கல்யாண உற்சவம் நடந்தது. நேற்று காலை, 5:00 மணிக்கு, கோ பூஜையுடன் நடை திறக்கப்பட்டு, 16 வகையான திரவியங்கள் கொண்டு, மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, காலை, 6:00 மணிக்கு, சுப்பிரமணியசுவாமி, தங்க கவசத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். காலை, 10:15 மணிக்கு, மங்கள வாத்தியங்கள் முழங்க, வள்ளி, தெய்வானை சமேதர சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் வெகு சிறப்பாக நடந்தது. இதில், பக்தர்கள் மொய்ப்பணமாக, 84,436 ரூபாய் வசூலானது. அதன்பின், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி, மலர் பல்லக்கில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கந்த சஷ்டி விழாவையொட்டி, விரதம் இருந்த பக்தர்கள், தங்களது விரதங்களை நிறைவு செய்தனர். இதில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி