உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சேவல் சண்டை மூவர் கைது

சேவல் சண்டை மூவர் கைது

கோவை; பீளமேடு பகுதியில் சேவல் சண்டை சூதாட்டத்தில் ஈடுபட்ட, மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். கோவை, பீளமேடு பகுதியில் சேவல் சண்டை சூதாட்டம் நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு, மூன்று நபர்கள் பணம் வைத்து சேவல் சண்டை நடத்தியது தெரியவந்தது.சேவல் சண்டை நடத்திய ஆவாரம்பாளையத்தை சேர்ந்த கார்த்திக், 32, மோகன் ராஜ்,40 மற்றும் பி.என்.பாளையத்தை சேர்ந்த ஸ்டான்லி, 22 ஆகியோரை போலீசார் கைது செய்தனர். சண்டைக்காக பயன்படுத்தப்பட்ட இரண்டு சேவல்க ளையும், பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை