கஞ்சா விற்பனை மூவருக்கு குண்டாஸ்
கோவை; கோவை மாநகர் பகுதியில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூவரை, போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ், சிறையில் அடைத்தனர். கோவை மாநகர எல்லைக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில், கடந்த மாதம், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட, பழனியை சேர்ந்த விக்ரம் என்கிற பாலாஜி, 46, புலியகுளத்தை சேர்ந்த வெங்கடேஷ் குமார், 24, பெரியநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த சஜானா, 23 ஆகிய மூவர் மீது வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மூவரும், தொடர்ந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததால், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க, மாநகர போலீஸ் கமிஷனர் சரவண சுந்தர் உத்தரவிட்டார். சிறையில் உள்ளவர்களிடம், இதற்கான ஆணையை போலீசார் வழங்கினர்.