/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மூன்று நாட்கள் புத்தாக்க பயிற்சி சார்நிலை அலுவலர்கள் பங்கேற்பு
மூன்று நாட்கள் புத்தாக்க பயிற்சி சார்நிலை அலுவலர்கள் பங்கேற்பு
கோவை: கோவை மாவட்ட கூட்டுறவுத் துறை சார்நிலை அலுவலர்களுக்கான, மூன்று நாட்கள் புத்தாக்கப் பயிற்சி, ஆனைகட்டியில் நேற்று துவங்கியது. கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குனர் ராமகிருஷ்ணன், பயிற்சி வகுப்பை துவக்கி வைத்தார். இதில், பணியமைப்பு, சட்டப் பணிகள், தணிக்கை, வருமான வரி, சைபர் பாதுகாப்பு குறித்த பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன. மண்டல இணைப்பதிவாளர் அழகிரி, துடியலுார் கூட்டுறவு விவசாய சேவா ஸ்தாபனத்தின் இணைப்பதிவாளர் கோமதி, துணைப்பதிவாளர்கள் தினேஷ்குமார், வடிவேல், ஆனந்தன், சிவக்குமார், கீதா, ஜெயக் குமார், காவியா, நல்லமணி, அகல்யா உட்பட, கூட்டுறவு சார் பதிவாளர்கள், முதுநிலை ஆய்வாளர்கள், இளநிலை ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.