உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மகிழ்ச்சிக்கு மூன்று மந்திரம்

மகிழ்ச்சிக்கு மூன்று மந்திரம்

கோவை; கோவை நகைச்சுவை சங்கத்தின் 19வது, 'வாங்க சிரிக்கலாம்' கூட்டம், நவஇந்தியா, இந்துஸ்தான் கலை கல்லுாரியில் நடந்தது.பேச்சுத் துறையில் ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக இருந்து வரும் பேராசிரியர் சிவகாசி ராமச்சந்திரன் விருந்தினராக கலந்துகொண்டார்.மேடையில் பேராசிரியர் ராமச்சந்திரன் மற்றும் அவரின் மனைவி வைரம் ஆகியோருக்கு, பொன்னாடை போர்த்தி, கேடயம் வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.பேராசிரியர் ராமச்சந்திரன் தம் உரையில், 'மகிழ்ச்சிக்கு மூன்று மந்திரங்கள் உள்ளது. எந்த சுழ்நிலையிலும் டென்ஷன் ஆகாதீர்கள், கஷ்டங்களை கவலைகளாக ஆக்காதீர்கள், ஆசைகளை எல்லாம் தேவைகள் ஆக்காதீர்கள்' என்று பேசினார்.இளந்தலைமுறை பேச்சாளர்களை அறிமுகப்படுத்தும் வரிசையில் கபிலா விசாலாட்சி பேசினார். கோவை நகைச்சுவை சங்கத்தின் செயலாளர் தனபால், முனைவர்கள் கணேசன், குரு ஞானாம்பிகை நிகழ்வில் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை