உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்துக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்துக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

ஆனைமலை; ''பயிர் காப்பீடு திட்டத்தில் விண்ணப்பிக்க கடைசிநாளான இன்று, 'ஆன்லைனில்' விண்ணப்பிக்கலாம்,' என ஆனைமலை வேளாண்மைதுறையினர் தெரிவித்தனர். ஆனைமலை வே ளாண்மை உதவி இயக்குனர் விவேகானந்தன் அறிக்கை: ஆனைமலை வட்டாரத்தில், காரீப் பருவத்தில் ஆனி மாதத்தில் நெல் மற்றும், மானாவாரி பயிர்களான சோளம், நிலக் கடலை, தட்டை போன்ற வளர்ச்சிக்குத் தேவையான மழை கிடைத்துள்ளது. நெல், உளுந்து மற்றும் பாசிப்பயறு பயிர்களுக்கு புதுப்பிக்கப்பட்ட பிரதமரின் பயிர்காப்பீடு திட்டம் செயல்படுத்தப்படுகிறது. காலநிலை மாற்றம் வறட்சி, வெள்ளம், வேறு காரணங்களால் ஒவ்வொரு பருவத்திலும், பயிர் அறுவடை நேரத்தில் இழப்பு ஏற்படும் போது,பாதிப்பை மதிப்பிட்டு, இழப்பீட்டு தொகை வழங்கப்படுகிறது. நெல் பயிருக்கு விவசாயி செலுத்த வேண்டிய பிரிமியத்தொகையாக ஏக்கருக்கு, 760.80ரூபாய், உளுந்து மற்றும் பாசிபயறுக்கு ஏக்கருக்கு, 336 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிரிமியத்தொகை செலுத்த கடைசி நாள் இன்று (31ம் தேதி) www.pmfby.gov.inஇணையதளத்தில் ஆதார் அட்டை எண், நில சிட்டா, சாகுபடி மேற்கொண்டதற்கான அடங்கல், ஆதார் இணைக்கப்பட்டுள்ள வங்கிக்கணக்கு புத்தகத்தின் முதல்பக்க நகல்களுடன் பொது சேவை மையம் அல்லது வட்டார வேளாண்மை விரிவாக்க மையம் வாயிலாக செலுத்தி, ரசீது பெற்றுக்கொள்ளலாம். இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !