உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்

மாநகரில் இன்றைய சிறப்பு நிகழ்ச்சிகள்

சித்திரைப் பெருந்திருவிழா

அவிநாசி ரோடு, தண்டுமாரியம்மன் கோவிலில், சித்திரைப் பெருந்திருவிழா நடந்து வருகிறது. இன்று, காலை 10:00 மணிக்கு, சிங்கை கலைக்குழுவினரின் சிங்கை வள்ளி கும்மியாட்டம் மற்றும் ஒயிலாட்டம் நடக்கிறது. இரவு, 7:00 மணிக்கு பரதநாட்டிய நிகழ்ச்சி மற்றும் 8:00 மணிக்கு, சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நடக்கிறது.

ருக்மணி கல்யாண மகோற்சவம்

ராம்நகர், கோதண்டராமசுவாமி கோவிலில் ருக்மணி கல்யாண மகோற்சவம் நடக்கிறது. காலை, 8:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை, உஞ்சவ்ருத்தி, ருக்மணி கல்யாண மகோற்சவம் நடக்கிறது. மாலை, 4:00 மணிக்கு, வசந்த கேளிக்கை பவ்வளிம்பு மற்றும் ஆஞ்சநேய உற்சவம் நடக்கிறது.

குண்டம் திருவிழா

கணபதி மாநகர், பண்ணாரி மாரியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா நடக்கிறது. இன்று, இரவு, 7:00 மணிக்கு, வாசியலயா டான்ஸ் அகாடமி மற்றும் ஜதிலயா பரதநாட்டியம் குழுவினரின் பரத நாட்டிய நிகழ்ச்சி நடக்கிறது.

நீட் தேர்வு வழிகாட்டல்

அச்சிவர்ஸ் கிளப் இந்தியா சார்பில், நீட் தேர்வில் வெற்றி பெற்ற தலைசிறந்த வல்லுனர்களின் வழிகாட்டுதலுடன், இலவச ஒரு நாள் பயிற்சி வகுப்பு நடக்கிறது. ஓசூர் ரோடு, ஆருத்ரா ஹாலில், காலை, 10:00 முதல் மாலை, 5:00 மணி வரை வகுப்பு நடைபெறும்.

வளமாக்கும் இசை

செட்டிபாளையம், தாமரைக் கோவிலில், 83வது மாதாந்திரக் கூட்டம் ஏப்ரல் மாதச் சொற்பொழிவு நடக்கிறது. 'வாழ்வை வளமாக்கும் இசை' என்ற தலைப்பில், காளப்பட்டி, அரசு மேல் நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியை புஷ்பலதா உரையாற்றுகிறார்.

அமைதியின் அனுபவம்

தியானம், அன்பு பகிர்தல், இயற்கை, நேர்மறை எண்ணம் ஆகியவற்றின் மூலம் மன அமைதியை அனுபவிக்கலாம். அண்ணாசாலை எதிரில், ஓசூர் ரோட்டில் அமைந்துள்ள, ஆருத்ரா ஹாலில், இலவச வீடியோ சத்சங்கம் நடக்கிறது. 'நம்முள் அமைதியின் அனுபவம் சாத்தியமே' என்ற தலைப்பில், காலை, 11:00 மணிக்கு, சத்சங்கம் நடக்கிறது.

நுால் அறிமுகம்

புலம் தமிழ் இலக்கியப் பலகையின் இலக்கியச் சந்திப்பு நிகழ்ச்சி, காந்தி பூங்கா, மாரண்ண கவுடர் உயர்நிலைப்பள்ளியில், காலை, 10:00 மணிக்கு நடக்கிறது. 'தொடுவானம்' சிறுகதைத்தொகுப்பு நுால் அறிமும் மற்றும் கவியரங்கம் நடக்கிறது.

மஞ்சள் காமாலை கருத்தரங்கு

வி.ஜி.எம்., மருத்துவமனை, அன்னுார் டவுன், கோவை கிழக்கு, கோவை ஜெனித் ரோட்டரி சங்கங்கள் சார்பில், மருத்துவ கருத்தரங்கம் நடக்கிறது. மஞ்சள் காமாலை சி - வைரஸ் மற்றும் கல்லீரல் நோய்கள் பற்றி கருத்தரங்கம் நடக்கிறது. அன்னுார், ஊத்துப்பாளையம், ஸ்ரீ வேலவன் மஹாலில், மாலை, 4:00 மணிக்கு நிகழ்ச்சி துவங்குகிறது.

களப்பணி

வெள்ளலுார் குளம் மியாவாக்கி அடர்வனம் மற்றும் பட்டாம்பூச்சி பூங்காவில், 387 வது தொடர் களப்பணி நடக்கிறது. துாய்மை மற்றும் பராமரிப்பு பணியில் ஈடுபட விரும்புபவர்கள் கலந்து கொள்ளலாம். காலை, 7:00 முதல் 9:00 மணி வரை களப்பணி நடைபெறும்.

சமஸ்கிருத வகுப்புகள்

ராம்நகர், ஸ்ரீ கோதண்டராமசுவாமி தேவஸ்தானம் மற்றும் சமஸ்கிருத வித்யாஸ்ரீ இணைந்து, சமஸ்கிருத வகுப்புகளை நடத்துகின்றன. காலை, 10:15 முதல் மதியம், 1:15 மணி வரை, சமஸ்கிருத மொழி, பகவத்கீதை, ஸ்லோகங்கள் கற்பித்து தரப்படுகிறது.

குடிநோய் விழிப்புணர்வு முகாம்

ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், சுண்டக்காமுத்துார், டி.எஸ்.நர்சரி பள்ளியில், காலை, 10:30 முதல் மதியம், 12:00 மணி வரை நடக்கிறது. * குனியமுத்துார், டிவைன் மேரி சர்ச்சில், மாலை, 6:30 முதல், இரவு, 8:30 மணி வரை நடக்கிறது.

கண் சிகிச்சை முகாம்

கோவை மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், அன்னுார், தாசபளஞ்சிக சேவா சங்கம் சார்பில் இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தப்படுகிறது. கோவை அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்தும் இந்த முகாம், அன்னுார், தாச பளஞ்சிக சேவா சங்க பெரிய திருமண மண்டபத்தில், காலை, 8:30 மணி முதல் மதியம், 1:00 மணி வரை நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை