தைப்பூச திருவிழா
மருதமலை, முருகன் கோவிலில், தைப்பூச திருவிழாவின் ஒரு பகுதியாக சிறப்பு பூஜைகள் நடக்கிறது. காலை, 7:00 முதல், சுத்த புண்யாஹம், ஸ்நபனம், ஹவனம், அபிஷேகம் பூஜை மற்றும் தீபாராதனை நடக்கிறது. மாலை, 4:30 முதல் 7:30 மணி வரை, அபிஷேகம் பூஜை, தீபாராதனை நடக்கிறது. போட்டோ டுடே கண்காட்சி
போட்டோ, வீடியோ, டிஜிட்டல் பிரேமிங் மற்றும் ஆல்பம் தொழில் குறித்த கண்காட்சி, அவிநாசி ரோடு, கொடிசியா வளர்த்தக வளாகத்தில் நடக்கிறது. இன்று, கான்சப்ட் போட்டோகிராபி, கிரியேட்டிவ் போர்ட்ரைட் போட்டோகிராபி குறித்து வல்லுனர்கள் பேசுகின்றனர். இலவச போட்டோகிராபி ஷோ மற்றும் பயிலரங்கு நடக்கிறது. கண் பரிசோதனை மற்றும் கேமரா சர்வீசும் உண்டு. பகவத்கீதை சொற்பொழிவு
'நான்' என்ற அகந்தையை கைவிட்டு, எல்லையற்ற பேரின்பத்தில் மகிழ்வுறு என போதிக்கும் பகவத்கீதை, வாழ்வை ஆராதித்து வாழ கற்றுத்தருகிறது. அன்னுார், கரிவரதராஜ பெருமாள் கோவிலில், மாலை, 6:00 முதல், 7:00 மணி வரை, 'பகவத்கீதை' சொற்பொழிவு நடக்கிறது. பெண்ணொளி சங்கமம்
சுவாமி விவேகானந்தா சேவா கேந்திரம் சார்பில், 'பெண்ணொளி சங்கமம்' என்ற பெயரில், மாபெரும் பெண்கள் மாநாடு நடக்கிறது. அவிநாசி ரோடு, பி.எஸ்.ஜி.ஆர்., கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லுாரி அரங்கில், காலை, 10:00 முதல் மாலை, 4:00 மணி வரை இம்மாநாடு நடக்கிறது. பேச்சாளர்கள் பாரதி பாஸ்கர், வாசுகி மனோகரன் ஆகியோர் கலந்துகொள்கின்றனர். 'குடி'நோய் விழிப்புணர்வு முகாம்
தொடர்ச்சியான சிகிச்சை மூலம் குடிப்பழக்கத்திலிருந்து விடுபட முடியும். ஆல்கஹாலிக் அனானிமஸ் சார்பில், குடிநோய் குறித்த விழிப்புணர்வு முகாம், போத்தனுார், புனித ஜோசப் சர்ச் மற்றும் கோவைப்புதுார், ஆஷ்ரம் மெட்ரிக் பள்ளியில் நடக்கிறது. இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை, முகாம் நடக்கிறது.