துாய்மை இந்தியா 2.0 திட்டத்தில் கழிப்பறை
கோவை: மாநகராட்சி பகுதியில் பொது மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில், மேற்கு மண்டலம், 72வது வார்டுக்கு உட்பட்ட டி.பி.ரோட்டில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் இணையத் தொழிலாளர் கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இக்கூடத்தில் கழிப்பறை, ஏ.சி., உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. தொடர்ந்து, டி.பி. ரோட்டில் துாய்மை இந்தியா (ஸ்வச் பாரத் மிஷன் 2.0) திட்டத்தின் கீழ் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் பொது கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. பொள்ளாச்சி எம்.பி. ஈஸ்வரசாமி, இவ்விரு வசதிகளையும் மக்கள் பயன்பாட்டுக்காக நேற்று திறந்துவைத்தார். மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.