உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பொங்கல் பரிசு தொகுப்புக்கு டோக்கன் வீடு தேடி வழங்கும் ரேஷன் ஊழியர்கள்

பொங்கல் பரிசு தொகுப்புக்கு டோக்கன் வீடு தேடி வழங்கும் ரேஷன் ஊழியர்கள்

வால்பாறை;வால்பாறையில், பொங்கல் தொகுப்புக்கான 'டோக்கன்' வழங்கும் பணி துவங்கியுள்ளது.பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரசின் சார்பில் ஆண்டு தோறும் பொங்கல் தொகுப்பு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டு ரேஷன் கார்டுதாரர்களுக்கு, தலா, ஆயிரம் ரூபாய் ரொக்கம், 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, கரும்பு ஆகியவை அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.வால்பாறை தாலுகாவில் மொத்தம், 16,079 ரேஷன் கார்டுகள் உள்ளன. 43 ரேஷன் கடைகள் வாயிலாக, பொங்கல் தொகுப்பு வழங்கப்படவுள்ளன. இதனை தொடர்ந்து, வால்பாறை தாலுகாவில் உள்ள ரேஷன் கடைகளில் 'டோக்கன்' வழங்கும் பணி துவங்கியது.வட்ட வழங்கல் அலுவலர் ஷாஜகான் கூறியதாவது:வால்பாறை தாலுகாவில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு அந்தந்த ரேஷன் கடைகளின் வாயிலாகபொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். இந்த முறை, கைவிரல் ரேகை பதிவு அடிப்படையில், பொருட்கள் வழங்கப்படும்.கடைகளில் கூட்ட நெரிசலை தவிர்க்க, 'டோக்கன்' முறையில் ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொங்கல் தொகுப்பு வழங்கப்படும். ரேஷன் கடை விற்பனையாளர்கள் எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல் தொகுப்பினை வழங்க வேண்டும். இவ்வாறு, கூறினார்.

கரும்புக்கு பாதுகாப்பு!

ரேஷன் கடை ஊழியர்கள் கூறியதாவது: வால்பாறையை சுற்றியுள்ள பல்வேறு எஸ்டேட்களில், நுாற்றுக்கும் மேற்பட்ட யானைகள் தனித்தனி கூட்டமாக முகாமிட்டுள்ளன.யானைகளுக்கு மிகவும் பிடித்தமான கரும்பு பொங்கல் பரிசு தொகுப்புடன் வழங்கப்படவுள்ளதால், யானைகளுக்கு பயந்து கடைகளில் கரும்பு இருப்பு வைக்க முடியாமல் தவிக்கிறோம். பொங்கல்பரிசு வழங்கும் நாட்களில் இரவு நேரத்தில் ரேஷன் கடைகளுக்கு யானை வராமல் தடுக்க, வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும்.இவ்வாறு, கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை