உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கோவை மாநகரில் டன் கணக்கில் குவிந்த குப்பை

கோவை மாநகரில் டன் கணக்கில் குவிந்த குப்பை

கோவை: கோவை மாநகரில் டன் கணக்கில் குப்பை குவிந்தது.கோவை மாநகராட்சியில் உள்ள 5 மண்டலங்களில் 100 வார்டுகள் உள்ளன. இங்கு குடியிருப்புகள், வணிக வளாகங்கள், தெருக்கள் மற்றும் முக்கிய சாலைகளில் தினசரி 1200 டன் வரை குப்பை தேங்கும். இதனை மாநகராட்சி துாய்மைப் பணியாளர்கள் தினமும் காலை 6:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் தீபாவளி பண்டிகை என்பதால் கடந்த, 2 நாட்களாக கோவை மாநகரில், 100 வார்டுகளிலும் வழக்கத்தைவிட, 200 டன் குப்பை கூடுதலாக சேர்ந்தது. தீபாவளியையொட்டி சில துாய்மைப் பணியாளர்கள் விடுமுறை என்பதால் வீடுகளுக்கு சென்று சேகரிக்கும் குப்பையும், பட்டாசு கழிவுகளும் ஆயிரம் டன்னுக்கு மேல் சேர்ந்தது.இந்த குப்பைகளை இன்று காலை முதல் துாய்மைப் பணியாளர்கள் அகற்றும் பணியை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், துாய்மைப் பணியாளர்கள் பண்டிகை முடிந்த கையோடு ஓய்வில்லாமல் குப்பை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், “சில துாய்மை பணியாளர்கள் விடுமுறை யில் இருப்பதால் ஒரு சில இடங்களில் குப்பைகள் அகற்றும் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. நாளை (இன்று) பணியாளர்கள் அனைவரும் பணிக்கு வந்து விடுவார்கள். அனைத்து இடங்களிலும் உள்ள குப்பைகள் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்படும்,” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

DJ Serve Life
நவ 30, 2024 15:07

முன்னோர்களை போல் குப்பை இல்லாமல் சுத்தம் சுகாதாரமாக எருவை சேமிப்பது எப்படி அதை திரு. அசோக அரசர் போல் நெடும்சாலையோரம் மரம் வளர்ப்பது எப்படி? நினைவு கூறுங்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை