மேலும் செய்திகள்
சுற்றுலா பயணியர் வருகை; 'களை' கட்டியது வால்பாறை
29-Sep-2025
பொள்ளாச்சி; தொடர் விடுமுறை காரணமாக, பொள்ளாச்சி அருகே உள்ள ஆழியாறு கவியருவிக்கு, அதிகப்படியான சுற்றுலா பயணியர் வருகின்றனர். பொள்ளாச்சி அடுத்துள்ள, மேற்கு தொடர்ச்சி மலையில் முக்கிய சுற்றுலா தலங்களாக ஆழியாறு அணை, பூங்கா, ஆற்றுப்படுகை மற்றும் கவியருவி பகுதிகள் உள்ளன. பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை காரணமாக, அதிகப்படியான சுற்றுலா பயணியர் வருகை புரிகின்றனர். கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள், தங்கள் குடும்பத்தினருடன் இப்பகுதிகளுக்கு வந்தனர். கவியருவியில் கொட்டும் தண்ணீரில் குளிக்க ஆர்வம் காட்டினர். இதேபோல், வரும் நாட்களில் அரசு விடுமுறையை முன்னிட்டு, சுற்றுலா பயணியர் அதிகளவில் வர வாய்ப்புள்ளது. அதற்கேற்ப பாதுகாப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வனத்துறையினர் திட்டமிட்டுள்ளனர். வனத்துறையினர் கூறுகையில், 'பகலில் வெயில் அதிகம் இருந்ததால், கவியருவிக்கு சென்று குளிக்க சுற்றுலா பயணியர் ஆர்வம் காட்டுகின்றனர். வரும் நாட்கள், தொடர் விடுமுறையாக இருப்பதால், சுற்றுலா பயணியர் அதிகளவில் வருவர். விதிமீறலை தடுக்க வேட்டைத் தடுப்பு காவலர்களை கூடுதலாக நியமித்து, கண்காணிப்பு மற்றும் ரோந்து பணி தீவிரப்படுத்தப்படும்,' என்றனர்.
29-Sep-2025