உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / வணிகர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

வணிகர் சங்கத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சி; வணிக வளாகங்கள் செலுத்தும் வாடகைக்கு, 18 சதவீதம் ஜி.எஸ்.டி., விதிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய, மாநில அரசுகளை கண்டித்து, தமிழக வணிகர் சங்கங்களில் பேரமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.பொள்ளாச்சி ராஜேஸ்வரி ஹால் முன், பொள்ளாச்சி வணிகர்களின் பேரமைப்பு, வியாபாரிகள் சங்கம், சிறு வியாபாரிகள் சங்கம் மற்றும் அனைத்து வணிக சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.இதில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு, மாவட்ட தலைவர் விஜயகுமார், செயலாளர் வின்சென்ட், பொருளாளர் மாரிமுத்து, வியாபாரிகள் சங்கச் செயலாளர் சேதுபதி, பொருளாளர் ரவீந்தர், வட்டார சிறு வியாபாரிகள் சங்கத் தலைவர் சக்திவேல், செயலாளர் ஹரிகிருஷ்ணன் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி