உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரயில் நேரம் மாற்றம் பயணியர் போராட்டம் பொள்ளாச்சியில் பரபரப்பு 

ரயில் நேரம் மாற்றம் பயணியர் போராட்டம் பொள்ளாச்சியில் பரபரப்பு 

பொள்ளாச்சி:பொள்ளாச்சி - கோவை ரயில் நேரம் மாற்றத்தை கண்டித்து, ரயில் முன் நின்று பயணியர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.பொள்ளாச்சி - கோவைக்கு தினமும் காலை, 7:25 மணிக்கு ரயில் கிளம்பி, கோவைக்கு, 8:40 மணிக்கு சென்றடைந்தது. இந்த ரயிலில், வேலைக்கு செல்வோர், கல்லுாரி மாணவர்கள் என பயன்படுத்தி வந்தனர்.இந்நிலையில், புதிய ஆண்டில் இருந்து கோவைக்கு இயக்கப்படும் ரயில் நேரம் மாற்றம் செய்யப்பட்டது. இதற்கு ரயில் பயணியர் எதிர்ப்பு தெரிவித்தனர். நேற்று ரயில்வே அதிகாரிகளை சந்தித்து, பழைய நேரத்துக்கு ரயில் இயக்க கோரி, ரயில் பயணியர் கோரிக்கை விடுத்தனர்.அதன்பின், ரயில் முன் நின்று, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பழைய நேரத்துக்கே ரயிலை இயக்க வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர். இதனால், ரயில்வே ஸ்டேஷனில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து விசாரணை நடத்தி, போராட்டம் நடத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய உள்ளதாக ரயில்வே போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.ரயில் பயணியர் கூறுகையில், 'பொள்ளாச்சி - கோவைக்கு இயக்கப்படும் ரயிலை பயன்படுத்தி, அரசு மற்றும் தனியார் வேலைக்கு செல்வோர், கல்லுாரி மாணவர்கள் பயன்படுத்தி வந்தோம். காலை, 9:00 மணிக்கு அலுவலகத்துக்கு செல்லும் வகையில், பயனாக இருந்தது.தற்போது, காலை, 8:00 மணிக்கு கிளம்பி, 9:25 மணிக்கு கோவைக்கு செல்கிறது. இதனால், அலுவலக பணிக்கு செல்வதில் சிக்கல் ஏற்படுகிறது. எனவே, பழைய நேரப்படி ரயில் இயக்க வேண்டும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

M Ramachandran
ஜன 14, 2025 11:16

கேரளா காரனின் குசும்பு. அவனுக்கு ஹரியும் இங்கு நடப்பது திராவிட விடியாமூஞ்சி ஆட்சி., இதிலெல்லாம் அவர்களுக்கு அக்கரையில்லை. ரயில் லைனெ என எடுத்தாலும் தூக்கமா கலையாது குறட்டை சப்தத்துடன் தூக்கம்.


Narayanamoorthy
ஜன 04, 2025 13:06

தெற்கு ரயில்வே அதிகாரிகள் தனியார் பேருந்து உரிமையாளர்களிடம் சமரசமாக போயிருப்பார்கள் இருந்தாலும் மக்கள் எதிர்ப்பு இருக்கும் எல்லாம் போக போக சரியாகி விடும் என்ற அலட்சியமும் ஒரு காரணமாக இருக்கும் ஆனால் மக்கள் கடும் எதிர்ப்பு காட்டினால் கட்டாயம் தெற்கு ரயில்வே பழைய அட்டவணைபடியே ரயில் இயக்கத்தை தொடரும் இனி எல்லாம் மக்கள் கையில் தான் உள்ளதுங்க


Stanley Raj
ஜன 03, 2025 10:52

பொள்ளாச்சி பேசஞ்சர் ரயில் ரயில் நிலையத்திற்கு அடுத்தது என் ஜி எம் காலேஜ் முதல் வடுகபாளையம் வரை இடையில் ஒரு சிறு ஸ்டேஷன் உருவாக்கி நிப்பாட்டினால் அனைத்து பேருந்தில் பயணிக்கும் பொது மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். இதற்கும் சேர்த்து போராடுங்கள் வாழ்த்துக்கள் நன்றி


சமீபத்திய செய்தி