உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / தேசிய ஜூனியர் கால்பந்து போட்டியில் பங்கேற்க விரும்புவோருக்கு பயிற்சி முகாம்; நாளை முதல் கோவையில் நடக்கிறது

தேசிய ஜூனியர் கால்பந்து போட்டியில் பங்கேற்க விரும்புவோருக்கு பயிற்சி முகாம்; நாளை முதல் கோவையில் நடக்கிறது

கோவை; தமிழ்நாடு ஜூனியர் கால்பந்து அணிக்கான வீரர்கள், முகாம் வாயிலாக தேர்வு செய்யப்பட்டு கோவையில் சிறப்பு பயிற்சி அளிக்க, முடிவு செய்யப்பட்டுள்ளது.தேசிய ஜூனியர் கால்பந்து போட்டி பஞ்சாப் மாநிலத்தில் வரும், 20ம் தேதி துவங்குகிறது. இதற்கென, மாநில அளவிலான அணிகள் தேர்வு செய்யப்பட்டு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த முறை, தமிழ்நாடு ஜூனியர் அணி வீரர்களுக்கு சிறப்பு பயிற்சி அளித்து, தயார்ப்படுத்த கோவை மாவட்ட கால்பந்து சங்கத்துக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.இதையடுத்து, நாளை முதல் ஈச்சனாரியில் உள்ள தனியார் கல்லுாரி, கால்பந்து மைதானத்தில் வீரர்களுக்கு பயிற்சி முகாம் நடக்கிறது. இம்முகாமில் தேர்வு செய்யப்படும் வீரர்களுக்கு, கால்பந்து சங்கத்தினர், பயிற்சியாளர்கள் வாயிலாக பிரத்யேக பயிற்சி அளிக்க உள்ளனர்.கோவை மாவட்ட கால்பந்து சங்க செயலாளர் அனில்குமார் கூறுகையில், ''தமிழ்நாடு ஜூனியர் கால்பந்து அணிக்கு விளையாடும் வீரர்களுக்கு, பயிற்சி அளிக்கும் வாய்ப்பு பல ஆண்டுகளுக்கு பிறகு தற்போது கிடைத்துள்ளது. இக்கல்லுாரி மைதானத்தில் இடம்பெறும் முகாமில் தமிழகத்தில் இருந்து, 40 வீரர்கள் பங்கேற்கின்றனர்.முதல் மூன்று நாள் முகாமில் இவர்களில் இருந்து, 28 வீரர்கள் தேர்வு செய்யப்படுவர். தொடர்ந்து நடக்கும் முகாமில் இந்த, 28 வீரர்களில் இருந்து தனித்திறமை அடிப்படையில், 22 பேர் தேர்வு செய்யப்படுவர். இவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வரும், 17ம் தேதி பஞ்சாப் அனுப்பிவைக்கப்படுவர்,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை