இன்று துவங்குது பயிற்சி வகுப்பு; குரூப் 1 தேர்வர்களுக்கு வாய்ப்பு
கோவை; குரூப் 1 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள், மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் இன்று துவங்குகிறது.தமிழக அரசு பணியாளர் தேர்வாணைய அறிவிப்பின் வாயிலாக, துணை கலெக்டர், காவல் துணை கண்காணிப்பாளர், உதவி ஆணையர் (வணிக வரி) ஆகிய பதவிகள் அடங்கிய ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு தொகுதி 1 (குரூப் 1)ல், 70 பணியிடங்களுக்கான தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் வரும் 30ம் தேதி. தேர்வு, ஜூன் 15ம் தேதி நடக்கிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள், கோவை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில், இன்று துவங்க உள்ளது.ஒரு இளங்கலை பட்டம் பெற்ற அனைவரும், வகுப்பில் பங்கேற்கலாம். சிறப்பான பயிற்றுனர்களை கொண்டு, ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில் நடத்தப்பட உள்ளது. மையத்தில், ஸ்மார்ட் போர்டு, இலவச வைபை வசதி, அனைத்து போட்டித் தேர்வுகளுக்கான புத்தகங்கள் அடங்கிய நுாலக வசதி ஆகியவை உள்ளன.பயிற்சி வகுப்பு, வாராந்திர மாதிரித் தேர்வுகள், முழு மாதிரி தேர்வுகள் போன்றவற்றுடன் நடத்தப்பட உள்ளது. https://tamilnaducareerservices.tn.gov.in என்ற இணையத்தில் பதிவு செய்து இலவசமாக பாடக்குறிப்புகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.பயிற்சியில் பங்கேற்க விரும்புவோர், தங்களது பாஸ்போர்ட் அளவு புகைப்படம் இரண்டுடன், இன்று காலை 10:00 மணியளவில், கோவை மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்துக்கு, நேரில் வர வேண்டும்.டி.என்.பி.எஸ்.சி., குருப் 4 தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பும், இம்மையத்தில் நடந்து வருகிறது.விபரங்களுக்கு: 0422 2642388.