உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  வேளாண் பல்கலையில் பேக்கரி பொருள் தயாரிக்க பயிற்சி

 வேளாண் பல்கலையில் பேக்கரி பொருள் தயாரிக்க பயிற்சி

கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலையில், பேக்கரி பொருட்கள் தயாரிக்க, நாளை, நாளை மறுநாள் என இரு நாட்களுக்கு, பயிற்சி அளிக்கப்பட உள்ளது. சிறுதொழில் முனைவோர் வருவாயைப் பெருக்கிக் கொள்ளவும், இல்லத்தரசிகள் தங்கள் வீடுகளில் தயாரித்துக் கொள்ளவும், பேக்கரி பொருட்களை எளிய முறையில் தயாரிக்கவும், தொழில்நுட்ப பயிற்சி அளிக்கப்படுகிறது. ரொட்டி வகைகள், கேக், பிஸ்கட், பப்ஸ் ஆகியவை செய்ய பயிற்சி அளிக்கப்படும். கட்டணம், வரிகள் உட்பட ரூ. 1,770. மேலும் விவரங்களுக்கு, அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்தை, 94885 18268 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி