| ADDED : ஜன 04, 2024 12:31 AM
கோவை : தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் அறிவியல் பாட ஆசிரியர்களுக்கு, வரும் 8ம் தேதி முதல் 12ம் தேதி வரை பயிற்சி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மையம் சார்பில், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, செயல்வழியில் அறிவியல் பாடம் எளிமையாக கற்பிப்பது தொடர்பான பயிற்சி, ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகிறது.இதன்படி, தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் அறிவியல் பாட ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.இதை வகுப்பறையில் செயல்படுத்தி, மாணவர்களின் கற்றல், கற்பித்தல் திறனில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்ய, முடிவு செய்யப்பட்டுள்ளது.கோவை மாவட்டத்தில், இப்பயிற்சிக்கு 50 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். வரும் 8 முதல் 12ம் தேதி வரை பயிற்சி நடக்கிறது.இதில் பங்கேற்கும் ஆசிரியர்களின் பட்டியல் வெளியிட்டு, பள்ளிகளில் பணிவிடுவிப்பு செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.