உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / 12 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம்

12 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம்

பொள்ளாச்சி;கோவை மாவட்டத்தில் பணியாற்றி வரும், 12 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.இது தொடர்பாக, கோவை மாவட்ட கலெக்டர் வெளியிட்டுள்ள உத்தரவு: கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில், பணியாற்றி வரும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நிர்வாக காரணங்களுக்காக, பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.அதன்படி, காரமடை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்த ராமமூர்த்தி தொண்டாமுத்துார் வட்டார வளர்ச்சி அலுவலராகவும், தொண்டாமுத்துார் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்த ஜெயக்குமார் எஸ்.எஸ்.குளம் வட்டார வளர்ச்சி அலுவலராகவும், எஸ்.எஸ்.குளம் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்த தனலட்சுமி, கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வட்டார வளர்ச்சி அலுவலராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராக (நிர்வாகம்) பணியாற்றி வந்த மகேஸ்வரி, காரமடை வட்டார வளர்ச்சி அலுவலராகவும், சூலுார் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்த சிவகாமி ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் (நிர்வாகம்), சுல்தான்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்த ரேவதி சூலுார் வட்டார வளர்ச்சி அலுவலராகவும் மாற்றப்பட்டுள்ளனர்.கிணத்துக்கடவு வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்த சிக்கந்தர்பாட்ஷா சுல்தான்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலராகவும், மதுக்கரை வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்த கோகன்பாபு ஆனைமலை வட்டார வளர்ச்சி அலுவலராகவும், அன்னுார் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வந்த லதா மதுக்கரை வட்டார வளர்ச்சி அலுவலராகவும், பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி