உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம்

துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம்

சூலுார்; கோவை மாவட்டத்தில், ஏழு துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். கோவை கலெக்டர் அலுவலகத்தில் வளர்ச்சி பிரிவில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக இருந்த சுவர்ணலதா, மாவட்ட ஊராட்சி அலுவலகத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் இருந்த லலிதா, கலெக்டர் அலுவலக வளர்ச்சி பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். கலெக்டர் அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக (திட்டம்) இருந்த சிவசண்முகம் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக ( தணிக்கை) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இப்பதவியில் இருந்த சுவாமிநாதன், சர்க்கார் சாமக்குளம் துணை வட்டார வளர்ச்சி அலுவலராக( 100 நாள் வேலை திட்டம்) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதேபோல், மேலும் மூன்று பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ