உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி
அன்னுார், ;காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதலில், 27க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதை கண்டித்தும், இறந்தோருக்கு அஞ்சலி செலுத்தவும் பா.ஜ., சார்பில், அன்னுார் கைகாட்டியில் நிகழ்ச்சி நடந்தது.பா.ஜ., கோவை வடக்கு மாவட்ட தலைவர் மாரிமுத்து, ஒன்றிய தலைவர் ஆனந்தன், மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.பயங்கரவாதிகள் தாக்குதலில், உயிரிழந்தோருக்கு, இரண்டு நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.