உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / கார் மீது லாரி மோதல்: விபத்தில் ஒருவர் பலி

கார் மீது லாரி மோதல்: விபத்தில் ஒருவர் பலி

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, கார் மீது லாரி மோதிய விபத்தில் ஒருவர் இறந்தார்.கோவை கணபதியை சேர்ந்தவர் சிவக்குமார்,45. இவர், நேற்று அவரது அம்மா கண்ணாமணி,65, உடன் காரில், பொள்ளாச்சி நோக்கி வந்தார். நஞ்சேகவுண்டன்புதுார் அருகே வந்த போது, எதிரே தவறாக வந்த லாரி, கார் மீது மோதியது. அதில், சம்பவ இடத்திலேயே சிவக்குமார் இறந்தார்.படுகாயமடைந்த கண்ணாமணி, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வடக்கிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரியை ஓட்டி வந்த வேலுாரை சேர்ந்த டிரைவர் குணசேகரன்,75, என்பவரிடம் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை