மேலும் செய்திகள்
வண்ணக் கோலமிட்டு எஸ்.ஐ.ஆர்., விழிப்புணர்வு
4 minutes ago
ஆட்டோமேட்டிவ் துறையின் புதிய நுட்பங்கள் கண்காட்சி
5 minutes ago
வேலையுடன் ஊக்கத்தொகை பயன்படுத்திக்கொள்ள அழைப்பு
5 minutes ago
கோவைக்கு கிடைத்தது விருது
6 minutes ago
கோவில்பாளையம்: காலிங்கராயன் குளத்தில் செப்டிக் டேங்க் கழிவு நீர் ஊற்றிய லாரியை மக்கள் சிறை பிடித்தனர். கோவில்பாளையம் பேரூராட்சியில், 120 ஏக்கர் பரப்பளவு உள்ள காலிங்கராயன் குளம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு ஒரு லாரி செப்டிக் டேங்க் கழிவு நீரை குளத்தில் ஊற்றத் துவங்கியது. அப்போது அந்த வழியாக சென்ற ஒருவர் உடனடியாக ஊர் மக்களுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து பொதுமக்கள் அந்த லாரியை சிறை பிடித்தனர். கோவில்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் அந்த லாரியை போலீஸ் ஸ்டேஷனுக்கு கொண்டு சென்றனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
4 minutes ago
5 minutes ago
5 minutes ago
6 minutes ago