மேலும் செய்திகள்
முத்துமாரியம்மன் கோவிலில் திருவிழா கொடியேற்றம்
26-Dec-2024
வால்பாறை; நடுமலை எஸ்டேட் துண்டுக்கருப்பராயர் சுவாமி கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.வால்பாறை அடுத்துள்ளது நடுமலை எஸ்டேட் வடக்கு டிவிஷன். இங்கு, பழமையான துண்டுக்கருப்பராயர் சுவாமி, மகாமுனீஸ்வரர் சுவாமி, உச்சிகாளியம்மன் திருக்கோவிலின், 142ம் ஆண்டு திருவிழாவை முன்னிட்டு, நேற்று காலை, 5:00 மணிக்கு கணபதி ேஹாமம், 6:00 மணிக்கு அபிேஷகம், 7:00 மணிக்கு பூஜை நெய்வேத்தியம், 8:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடைபெற்றது. மாலை, 6:30 மணிக்கு எஸ்டேட் மேலாளர் கணேஷ்பாபு திருக்கொடி ஏற்றினார்.வரும், 26ம் தேதி மாலை, 6:00 மணிக்கு கணபதி பூஜை, நெய்வேத்தியம், சக்தி கும்பம் அழைத்து வரும் நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து பக்தர்கள் முளைப்பாரி மற்றும் பொங்கல், மாவிளக்கு, எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக செல்கின்றனர்.வரும், 27ம் தேதி, மதியம், 12:00 மணிக்கு உச்சி கால பூஜையும், மதியம், 1:00 மணிக்கு அன்னதானம் வழங்கும் விழாவும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை நடுமலை வடக்கு மற்றும் தெற்கு டிவிஷன் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
26-Dec-2024