மாணவர்களுக்கு போதை பொருள் சப்ளை செய்த இருவர் கைது
போத்தனூர்; கோவையில் கல்லூரி மாணவர்களுக்கு போதை பொருள், கஞ்சா சப்ளை செய்த இருவர் சிக்கினர்.கோவை செட்டிபாளையம் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட, ஜெ.ஜெ.நகர் மேம்பாலம் பகுதியில், போதை பொருள் விற்கப்படுவதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேற்று முன்தினம் போலீசார், அப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.அவ்வழியே இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர், போலீசாரை கண்டதும் அதிவேகமாக சென்றபோது, சாலையில் விழுந்து காயமடைந்தனர். போலீசார் அவர்களை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர்.விசாரணையில், அவர்கள் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த தீபன்ராஜ், 23, ஹிருத்திக்ரோஷன், 21 என்பதும், இருவரும் கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா, போதைப்பொருள் சப்ளை செய்ததும் தெரிந்தது.இவர்கள் மீது செட்டிபாளையம், பேரூர், சரவணம்பட்டி, அபிராமபுரம், எமணீஸ்வரம், திருசூலி போலீஸ் ஸ்டேஷன்களில் திருட்டு, கொள்ளை வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது.அவர்களிடமிருந்து 1.3 கி.கிராம் கஞ்சா, மூன்று கிராம் மெத்தாம்பெட்டமைன் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இவர்களது கூட்டாளிகள் குறித்து விசாரிக்கின்றனர்.