உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / லாட்டரி விற்ற இருவர் கைது

லாட்டரி விற்ற இருவர் கைது

ஆனைமலை;ஆனைமலை அருகே, மீன்கரை ரோடு மீனாட்சிபுரம் சோதனைச்சாவடி அருகே, ஆனைமலை போலீசார் ரோந்து சென்றனர். அப்போது, சந்தேகப்படும்படி நின்ற நபர்களை பிடித்து விசாரித்தனர்.விசாரணையில், ஆனைமலை இந்திரா நகரை சேர்ந்த முகமது ஹனீபா,60, அலாவுதீன் பாஷா, 55, என்றும், தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையில் ஈடுபட்டதும் தெரிய வந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீசார், 376 லாட்டரி சீட்டுகள், 1,000 ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி