பெண்ணிடம் பணம் பறித்த இருவர் சிறையில் அடைப்பு
கோவை; கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் சந்தியா, 36. நேற்று முன்தினம் கடைக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து வெளியே வந்தார். அங்கு வந்த அவரது உறவினரின் மகன்கள், சாய்பாபா காலனி கே.கே.நகரை சேர்ந்த மதன், 27, மாதவன், 25 ஆகிய இருவரும், சந்தியாவிடம் மதுகுடிக்க ரூ.1,000 கேட்டனர். சந்தியா மறுப்பு தெரிவித்ததால், அவரை மதன் மிரட்டினார். தொடர்ந்து மாதவன், கத்தியை காட்டி மிரட்டினார். சந்தியா தனது கணவரை உதவிக்கு அழைத்தார். அதற்குள், சந்தியா கழுத்தில் அணிந்திருந்த வெள்ளிச்செயினையும், கையில் இருந்த ரூ.300ஐயும் பறித்துக் கொண்டு இருவரும் தப்பினர். கவுண்டம்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து, இருவரையும் சிறையில் அடைத்தனர்.