ரத்ததானம் வலியுறுத்தி இருசக்கர வாகன பேரணி
கோவை; ரத்ததானத்தின் அவசியம் வலியுறுத்தி, கோவையில் இருசக்கர வாகனப் பேரணி நடத்தப்பட்டது.இதில், ரத்ததானம் மேற்கொள்வதன் அவசியத்தை வலியுறுத்தி, அன்னை கரங்கள் நலச்சங்கம் சார்பில், ஏழாவது ஆண்டாக, இரு சக்கர வாகனப் பேரணி, கோவையில் நேற்று நடத்தப்பட்டது.நேரு ஸ்டேடியம் அருகே, பேரணியை, கோவை மாநகர போக்குவரத்து துணை கமிஷனர் அசோக்குமார் துவக்கி வைத்தார். காந்திபுரம், கிராஸ்கட் ரோடு, நுாறடி ரோடு, மகளிர் பாலிடெக்னிக், ரேஸ்கோர்ஸ், மணிகூண்டு வழியாக, உக்கடம் குளம் அருகே நிறைவடைந்தது. 80 இரு சக்கர வாகனங்களில் பங்கேற்றனர். அதிகமாக ரத்ததானம் செய்தவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.நலச்சங்க தலைவர் கோபி, துணை தலைவர் சுரேஷ், நிர்வாகிகள் பிரகாஷ், யுவராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.