உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / ரயில்வே தண்டவாளத்தில் இரு தொழிலாளர்கள் சடலம்

ரயில்வே தண்டவாளத்தில் இரு தொழிலாளர்கள் சடலம்

பாலக்காடு;பாலக்காடு அருகே, ரயில்வே தண்டவாளத்தில் வடமாநில தொழிலாளர்கள் இருவர் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் ஒற்றப்பாலம் அருகே உள்ள சோரோட்டூர் பகுதியில், ரயில் தண்டவாளம் குறுக்கிடுகிறது. இங்கு, தண்டவாளம் அருகே இரு ஆண்கள் பலியாகி கிடைப்பதை அப்பகுதி மக்கள் கண்டுள்ளனர்.தகவல் அறிந்து, அப்பகுதிக்கு வந்த ஒற்றப்பாலம் போலீசார், சடலத்தை கைப்பற்றி ஒற்றப்பாலம் தாலுகா மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.போலீசார் கூறுகையில், 'ரயில் தண்டவாளம் அருகே இறந்து கிடந்த வாலிபர்கள், வெளிமாநில தொழிலாளிகள் என்பது தெரியவந்தது. இருவரும் ரயிலின் கதவு ஓரம் நின்று பயணித்த போது தவறி விழுந்திருக்கலாம் என கருதுகிறோம். பலியானவர்களுக்கு, 45, 35 வயது இருக்கும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை