மேலும் செய்திகள்
குளத்துப்பாளையத்தில் விபத்து பள்ளி மாணவன் மரணம்
30-Apr-2025
கோவை; தடாகம் பகுதியை சேர்ந்த பரத்குமார், 19; தனது இரு சக்கர வாகனத்தில், லாலி ரோடு பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த 'ஜீப்' ஒன்று கட்டுப்பாட்டை இழந்து, பரத்குமாரின் இருசக்கர வாகனத்தில் மோதியது. இந்த விபத்தில் துாக்கி வீசப்பட்ட பரத்குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதேபோல், பி.என்., புதுார், கோகுலம் காலனியை சேர்ந்தவர் புகழேந்தி, 21; தனது நண்பரான சரண், 22 என்பவருடன் வடவள்ளியில் இருந்து கணுவாய் ரோட்டில் பைக்கில் சென்று கொண்டிருந்தார். பைக்கை சரண் ஓட்டிச்சென்றார். கட்டுப்பாட்டை இழந்த பைக் அங்கிருந்து மின் கம்பத்தில் மோதியது. இதில் இருவரும் துாக்கி வீசப்பட்டு, புகழேந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயம் அடைந்த சரணை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இரு விபத்துகள் குறித்து மேற்கு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
30-Apr-2025