உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / துாய்மை பணியாளர்களுக்கு சீருடை கொடுத்தாச்சு

துாய்மை பணியாளர்களுக்கு சீருடை கொடுத்தாச்சு

உடுமலை:உடுமலை நகராட்சியில், நிரந்தர மற்றும் தற்காலிக ஒப்பந்த துாய்மைப்பணியாளர்களுக்கு சீருடைகள் வழங்கப்பட்டுள்ளன.உடுமலை நகராட்சியில், 33 வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளில் அனைத்து சுகாதார பணிகளும், 76 நிரந்தர மற்றும் 125 தற்காலிக ஒப்பந்த துாய்மைப்பணியாளர்கள் வாயிலாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அவ்வகையில், நாள் ஒன்றுக்கு, 22 டன் குப்பை சேகரம் செய்யப்பட்டு, அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன.இப்பணியாளர்களுக்கு, ஆண்டுதோறும், ஹெல்மெட், மாஸ்க், கிளவுஸ், பணிக்கருவிகளான தட்டுமார், மண்வெட்டி, சாக்கடை கரண்டி, கடப்பாரை, சீருடை உள்ளிட்ட பல்வேறு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்படுகின்றன.அவ்வகையில், தற்போது துாய்மைப்பணியாளர்களுக்கு சீருடைகள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக, நிரந்தர பணியாளர்களில் ஆண்களுக்கு, தலா 2 செட் சீருடை, துண்டு மற்றும் தையல் கூலி, 800 ரூபாய்; பெண்களுக்கு தலா, 2 சேலை, ஜாக்கெட் துணி மற்றும் தையல் கூலி 80 ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.தற்காலிக ஒப்பந்த பணியாளர்களுக்கு, தலா ஒரு ஓவர்கோட், அடையாள அட்டை மற்றும் விசில் வழங்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ