மேலும் செய்திகள்
விவசாயிகளுக்கு தனி எண் வழங்க சிறப்பு முகாம்
12-Feb-2025
மேட்டுப்பாளையம்; மத்திய அரசின் வேளாண் அடுக்கு திட்டத்தின் வாயிலாக விவசாயிகளுக்கு தனி அடையாள எண் வழங்கப்பட உள்ளது என கோவை மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் கிருஷ்ணவேணி தெரிவித்துள்ளார்.விவசாயத்தை பிரதானமாக கொண்ட கோவை மாவட்டத்தில், அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும் விவசாயிகளுக்கு சென்றடையும் வகையில் மத்திய அரசு, வேளாண் அடுக்கு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தை செயல்படுத்த, நில விவரங்களுடன் இணைக்கப்பட்ட விவசாயிகள் பதிவு விவரம், நில உடைமை வாரியாக புவியிடக் குறியீடு செய்த பதிவு விவரம், நில உடைமை வாரியாக பயிர் செய்த விவரம் ஆகிய 3 விவரங்களும் முக்கியமானவை ஆகும். இத்திட்டம் மத்திய வேளாண்மை அமைச்சகத்தின் வழிகாட்டு நெறிமுறையின்படி மாநிலம் முழுவதும் செயல்படுத்தப்பட உள்ளது.கோவை மாவட்டத்தில் மின்னணு முறையில், தரவுகள் சேகரிக்கப்பட்டு, ஆதார் எண் போன்று விவசாயிகளுக்கு தனித்துவமான அடையாள எண் வழங்கப்பட உள்ளது. விவசாயிகள் ஒப்புதல் பெறப்பட்ட பின்னரே, அவர்களின் தரவுகள் சேகரிக்கப்பட்டு, அடையாள எண் வழங்கப்பட உள்ளது. இதுகுறித்து கோவை மாவட்ட வேளாண் இணை இயக்குனர் கிருஷ்ணவேனி கூறியதாவது:-கோவை மாவட்டத்தில் தற்போது 54,500 விவசாயிகள் பிரதமரின் கவுரவ நிதி திட்டத்தின் கீழ் பதிவு செய்து பயனடைந்து வருகின்றனர். மத்திய அரசின் இத்திட்டத்தின் வாயிலாக தரவுகளை சரிபார்த்து அவர்களுக்கு அடையாள எண் வழங்கப்பட உள்ளது. இப்பணியை மேற்கொள்ள சிறப்பு முகாம்கள் கிராம அளவில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் ஒவ்வொரு வருவாய் கிராமத்திற்கும் வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத்துறை, வேளாண் பொறியியல் துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை அலுவலர்கள், அட்மா திட்ட பணியாளர்கள் வருகை தந்து, தனிப்பட்ட அடையாள எண் வழங்கும் பணியை மேற்கொள்கின்றனர். எனவே, விவசாயிகள் தங்களுடைய சிட்டா, ஆதார் எண், ஆதார் எண் இணைக்கப்பட்ட செல்போனையும் கொண்டு வந்து அடையாள எண் பதிவு செய்ய தங்களின் விவரங்களை வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.----
12-Feb-2025