உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / பராமரிப்பில்லாத திடக்கழிவு மேலாண்மை கூடம்

பராமரிப்பில்லாத திடக்கழிவு மேலாண்மை கூடம்

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, சூலக்கல்லில் திடக்கழிவு மேலாண்மை கூடம் பராமரிப்பின்றி உள்ளது.கிணத்துக்கடவு ஒன்றியத்திற்கு உட்பட்ட, சூலக்கல் ஊராட்சியில் உள்ள குடியிருப்பு பகுதியில் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் குப்பை சேகரிக்கப்படுகிறது. குப்பையை முறையாக தரம் பிரிக்காமல் ஊராட்சியின் சில பகுதிகளில் கொட்டி செல்கின்றனர். இதை சிலர் தீ வைத்து எரிக்கின்றனர். இதனால் அப்பகுதியில் சுகாதாரம் பாதிக்கப்படுகிறது.மேலும், திடக்கழிவு மேலாண்மை கூடத்தில், ஏராளமான பிளாஸ்டிக் பொருட்கள் சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த கூடம் பயன்பாட்டில் உள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.ஏனெனில், இந்த கூடத்தை சுற்றிலும் அதிக அளவு புதர் முளைத்து, இந்தக் கூடத்திற்குள் செல்ல முடியாத நிலை உள்ளது. மேலும், திடக்கழிவு மேலாண்மை கூடத்தின் கதவுகள், பூட்டு, ஜன்னல் என அனைத்தும் பராமரிக்கப்படாமல் இருப்பதால் துருப்பிடித்து காணப்படுகிறது.எனவே, இப்பகுதியில் உள்ள கூடத்தின் வெளிப்புறத்தில் இருக்கும் செடிகள் மற்றும் புதர்களை ஊராட்சி நிர்வாகம் சார்பில் சுத்தம் செய்து, குப்பையை தரம் பிரிக்க வேண்டும். மேலும், ஊராட்சி பகுதிகளில் திறந்தவெளியில் கொட்டப்படும் குப்பையை தவிர்க்க வேண்டும். குப்பைக்கு தீ வைப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என, அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ